Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.ல் போட்டியில் வீரர்களுக்கு… கொரோனா தடுப்பூசி போடப்படாது …இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு …!!!

இந்தியாவில்அடுத்த மாதம்  நடைபெற உள்ள 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொரோனா  பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று , இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது,அடுத்த மாதம் 9ம்  தேதி முதல் மே மாதம் 30ம்  தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் கொரோனா  மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு  வருகிறது. இந்நிலையில் 8 அணிகளில் ஒன்றான டெல்லி  கேப்பிட்டல்ஸ் அணி ,எங்கள்  அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், என்று வலியுறுத்தியது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் போட்டியில் பங்குபெறும் , 8 அணியில்  இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு கொரோனா  தடுப்பூசி போடும் திட்டம் இல்லை என்றும் , அந்த 8 அணிகளின்  நிர்வாகிகளிடம்  தெரிவித்துள்ளது .

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் போட்டி நடைபெறுவதற்கு முன் 7 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், தனிமைப்படுத்தியதில் 3 நாட்கள் வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இந்தப் பரிசோதனையில் வீரர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ,அவர்கள் குறைந்தது 10 நாட்களாவது கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார் . இதுபோன்றே  நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில், இந்திய வீரர்கள் கொரோனா  பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியதால் ,அவர்களை தனிமைப்படுத்த தேவையில்லை. அவர்கள் எப்போதும் போல நேரடியாக ஐ.பி.எல் தொடரில் விளையாடலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |