Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும்போது …சர்வதேசப் போட்டிகளை நடத்தாதீங்க …கெவின் பீட்டர்சன் வேண்டுகோள்…!!!

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்த வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் .

14வது ஐபிஎல் தொடரானது ,வருகின்ற ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னை ,பெங்களூர் ,மும்பை ,கொல்கத்தா ,டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இந்த தொடரில் பங்கு பெறுவார்கள். இதனால் ஐபிஎல் போட்டி தொடரானது ,பிரம்மாண்ட  திருவிழா போன்று நடைபெறும். இந்த ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது  ஐபிஎல் தொடருக்காக , அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் அதேவேளையில் சில நாடுகளில், சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள், அவர்கள் நாடுகளுக்காக நடத்தப்படும் சர்வதேச போட்டியில் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் போட்டித் தொடரில்  பாதியிலேயே விலகி விடுகின்றனர். இதைப்பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன், ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும்  சமயத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டாம் என்று  கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் .

Categories

Tech |