ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த, வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணியின் விளையாடிய ஏபி டி வில்லியம்ஸ், 42 பந்துகளில் 5 சிக்சர் ,3 பவுண்டரிகளை அடித்து 75 ரன்களை குவித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் ,5 ஆயிரம் ரன்களை கடந்த, 2வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்தார். தற்போது ஏபி டி வில்லியர்ஸ் 3288 என்ற குறைந்த பந்துகளிலேயே , 5 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். டேவிட் வார்னர் 3554 பந்துகளில்5 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய வீரர்களான சுரேஷ் ரெய்னா 3620 பந்துகளிலும் , ரோகித் சர்மா 3817 பந்துகளிலும் மற்றும் விராட் கோலி 3827 பந்துகளிலும் 5000 ரன்களை அடித்துள்ளனர்.