Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளில்50 அரை சதங்கள் அடித்து…! வரலாற்று சாதனை படைத்த டேவிட் வார்னர்…!!!

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதங்களை, அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார்.

நேற்று  நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலமாக , ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிக அரைசதம் அடித்த வீரர்களில் ,ஷிகர் தவான் 2வது இடத்திலும்  மற்றும் விராட்கோலி 3-வது இடத்திலும் உள்ளனர் . அதோடு 200 க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் 8வது இடத்தை பெற்றுள்ளார். இதுதவிர ஐபில் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த ,வெளிநாட்டு வீரர்களில் வரிசையில் கிறிஸ் கெய்ல் 354 சிக்சர்ககளும் , ஏபி டி வில்லியர்ஸ் 245 சிக்சர்கள் மற்றும் பொல்லார்டு 202 சிக்சர்கள் ஆகிய வீரர்களுக்கு அடுத்ததாக 4 வது இடத்தில் உள்ளார் .

Categories

Tech |