மீதமுள்ள ஐபிஎல் போட்டியை, உலக கோப்பை டி 20 போட்டிக்கு முன்பாக நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது .
வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது .அதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் (ஆகஸ்ட் 4-8) தேதிகளிலும் ,2வது டெஸ்ட் போட்டி லண்டனில் (ஆகஸ்ட் 12 -16) தேதிகளிலும், 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் (ஆகஸ்ட் 25- 29) தேதிகளில், 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் (செப்டம்பர் 2-6) தேதிகளிலும் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் (செப்டம்பர் 10-14 ) ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டியை நடத்துவதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் டெஸ்ட் போட்டியின் அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ,பிசிசிஐ கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தி உள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 போட்டி நடக்க இருப்பதால் இதற்கு முன்பாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மீதமுள்ள உள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்லது இங்கிலாந்தில் நடத்தலாமா என்ற யோசனையில் இருக்கிறது. ஏனெனில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்து இருப்பார்கள். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்தத் தேதியில் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் போட்டியை முடிக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றாலும் கூடிய விரைவில் இதற்கான பதிலை தெரிவிக்கும் என்று அத்துடன் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கும் , அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.