ஐபில் தொடரை தொடர்ந்து ,தற்போது இந்தியாவில் உலக கோப்பை டி 20 போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
14 வது ஐபிஎல் தொடரானது ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, போட்டிகள் நடைபெற்று வந்தன. 29 லீக் போட்டிகளை எந்த அச்சமுமின்றி, பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் 30வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு, ஏற்பட்ட கொரோனா தொற்றால் , அன்று நடைபெற இருந்த போட்டி ரத்தானது.
இதைத்தொடர்ந்து மேலும் பல வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப் படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஆனால் போட்டி எப்போது நடைபெறும் ,என்ற தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீண்டும் ஐபிஎல் போட்டி எப்போது நடைபெறும், என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை தவிர மற்றொரு போட்டியையும் , இந்தியாவில் நடத்துவதில் பிசிசிஐ-க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டிற்கான உலக கோப்பை டி20 போட்டி தொடரானது, இந்தியாவில் நடத்தப்படுவதாக ஐசிசி திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமாக இருப்பதால், இந்தியாவில் டி20 போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த வருடமும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது, ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ,பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதுபோலவே இந்தியாவில் ஒருவேளை, உலக கோப்பை டி20 போட்டி நடத்துவதற்கான சாத்தியமில்லை என்றால் , இதற்கு மாற்றாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.