Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப தடை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தலீபான்கள் தடை அறிவித்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முக்கியமாக பெண்களை கல்வி கற்கவும், பணிகளுக்கு செல்லவும்  அனுமதிக்கவில்லை. மேலும், இசை மற்றும் திரைப்படம் காண்பதற்கும் தலீபான்கள் தடை விதித்துள்ளார்கள்.

பொதுவாகவே தலிபான்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை எதிர்ப்பார்கள். இந்நிலையில், 2021-ஆம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதாவது, கிரிக்கெட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகள் இருக்கும்.

எனவே தான் தடை செய்யப்படுகிறது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய, கிரிக்கெட்டின் முன்னாள் தலைவரும், பத்திரிகையாளருமான எம்.இப்ரஹிம் மோமந்த் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Categories

Tech |