Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபிஎல் தொடரை , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்கலாம் …! முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி…!!!

ஐபிஎல் தொடரை   , சென்ற வருடம் போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியிருக்க வேண்டும் , என்று கர்சன் காவ்ரி  கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதித்தவர்களின், தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் ,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த,  ஐபிஎல் போட்டிகளும்  தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இந்திய அணியில் முன்னாள் இடது கை பந்து வீச்சாளரான கர்சன் காவ்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  ,இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா  தொற்று பாதிப்பு உள்ளது. எனவே இந்த 2021ம்  ஆண்டிற்கான, ஐபிஎல் போட்டியை  கடந்த வருடம் நடைபெற்றதை போல, ஐக்கிய அரபு அமீரகத்திலோ  அல்லது வேறு நாட்டில்  நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தற்போதைய சூழல் மோசமாக இருப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்தியாவின் நடத்தி இருக்க கூடாது என்றும், சென்ற வருடம் போலவே அரபு அமீரகத்தில் போட்டியை நடத்தியிருக்க வேண்டும் ,என்று அவர் கூறினார்

Categories

Tech |