Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் கொல்கத்தா அணியின் …! நியூசிலாந்து பேட்ஸ்மேனுக்கு கொரோனா தொற்று …!!!

ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற ,நியூசிலாந்து பேட்ஸ்மேன்  டிம் செய்பெர்டு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை , நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த முடியவில்லை என்றால், சுமார் 2,500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் ஒன்றான ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற ,நியூசிலாந்து வீரரான டிம் செய்பெர்டு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் . அவர் நாடு திரும்புவதற்கு முன்பாக ,பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று  உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்அவர் மற்ற வீரர்களிடமிருந்து, தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இதனால் நியூசிலாந்து வீரர்கள் ,பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆகியோர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட டிம் செய்பெர்டு தாயகம் திரும்ப முடியா நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |