Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸை…அசால்ட்டா தோற்கடிக்க முடியாது …சுனில் கவாஸ்கர் விளக்கம் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,மும்பை இந்தியன்ஸ் அணியை தோல்வியடைய செய்வது, சுலபமல்ல  என்று  சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார் .

2021 ம்ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ,அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் இடம்பெற்றுள்ளன.இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்டியா ,பொல்லார்டு, பும்ரா மற்றும்  குருணால் பாண்ட்யா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த  அணியாக திகழ்வதால், இந்த அணியை தோல்வியடைய செய்வது ,சுலபமல்ல என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறும்போது, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களை வீழ்த்துவது கடினமானது என்று தெரிவித்தார். இந்த அணியில்இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்  வீரர்களின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. மற்றொரு வீரரான ஹர்திக் பாண்டியா ,மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ,விளையாடிய மும்பை அணி வீரர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மும்பை அணியை வெல்வது சுலபமானது அல்ல ,என்று தெரிவித்தார் .

Categories

Tech |