Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் முதல் வீரர் …. ‘ஹிட்மேன் ரோகித்தின் மாஸ் ரெகார்ட்’ …. கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற 34 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – குயிண்டன் டி காக் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.அப்போது ஆட்டத்தில் 18 ரன்களை கடந்த கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

அதாவது ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்கெதிராக 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .அவருடைய இந்த சாதனையை மும்பை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .அதேபோல் ஒரே ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள்  குவித்தவர்கள் பட்டியலில் ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ்,  கேப்டன் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் .அதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி  இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |