ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 2 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,ஜூன் 10ஆம் தேதி 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே இந்த தொடரில் விளையாட உள்ள ,இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்களான சாம் கர்ரன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ்,ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் விளையாடி உள்ளனர்
இதனால் ஐபில் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் ,நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பங்கு பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து நாடு திரும்பியுள்ள, இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரத்தில் தனிமைப்படுத்துதலை முடிக்க இருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.