டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் சதம் எடுக்குக்கும் வாய்ப்பை தவற விட்டார் .
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகள் மோதிக் கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் , அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 99 ரன்களை குவிக்க .20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனியாளாக மயங்க் அகர்வால் போராடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 58 பந்துகளில் 99 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மயங்க் அகர்வால் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். 14 வருடங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ஆட்டமிழக்காமல் 99 ரன்களை குவித்த 3 வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ,சிஎஸ்கே அணி வீரரான சுரேஷ் ரெய்னாவும் ,2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வீரரான கிறிஸ் கெய்ல் ,இருவரும் 99 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் வெளியேறினர். இதனால் நேற்று நடந்த போட்டியின் மூலம் இந்த பட்டியலில் மயங்க் அகர்வால் இடம்பிடித்துள்ளார். அதோடு நேற்று நடந்த போட்டியில் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.