ஆர்சிபி அணியில் புதிய வீரர்கள் இணைந்துள்ளதால் , ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக ,அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் வருகின்ற 9ஆம் தேதி ,சென்னையில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஆர்சிபி அணி மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு அணி வீரர்களும் போட்டிக்காக சென்னைக்கு வந்தனர். நேற்று ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி சென்னைக்கு வந்துள்ளார். போட்டி நடைபெறுவதற்கு முன் ,7 நாட்கள் அனைத்து வீரர்களும் விடுதியில் தனிமைப் படுத்தி கொண்டு உள்ளனர். இதைப்பற்றி ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ,ஆர்சிபி அணியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறும்போது, இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் , பல்வேறு விதமான அமைப்புகளில் இருந்தாலும் கூட மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றும் ,அவர் கூறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று தான் ஐபிஎல் போட்டி முடிந்தது போல உணர்வதாக கூறினார். ஆர்சிபி அணியில் தற்போது புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளது , மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் புதிய வீரர்களோடு ,பழைய வீரர்கள் இணைந்து தொடரை விளையாட போவதால், அணியின் பலவித மாற்றங்கள் ஏற்படும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நடக்கப்போகும் போட்டிகளில் நிறைய தொடர்களை வெற்றி பெற்று ,கைப்பற்றும் என்று நம்புவதாக அவர் கூறினார்.