Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஐபில் தொடரில் விளையாட உள்ள’…! பாகிஸ்தான் வீரர்- முகமது ஆமிர்…! வெளியான தகவல் …!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன்  ஏற்பட்ட மனக்கசப்பால்,  வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ,சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 29 வயதுடைய முகமது ஆமிர்  பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளராக விளையாடி வந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, முன்னதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் இவர் இங்கிலாந்தில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான குடியுரிமையை பெற உள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்று , குடும்பத்துடன் தங்க இருப்பதாகவும், 6 முதல் 7 வருடங்கள் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்று விளையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் இவருக்கு  இங்கிலாந்து குடியுரிமை கிடைத்துவிட்டால்  , ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அரசாங்கமும், பிசிசிஐ-யும்  தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள்  வீரரான அசார் மெஹ்மூத் , இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று ஐபிஎல் தொடரில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்குபெற்று விளையாடியுள்ளார். இதைத்தொடர்ந்து  முகமது ஆமிர், ஐபில் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.இதுகுறித்து அவர் பேசும் போது , முதலில் இங்கிலாந்தின்  குடியுரிமையை பெற்ற பிறகுதான் , அடுத்து போட்டிகளில் பங்கேற்பது பற்றி சிந்திக்க முடியும் என்றும் ,தற்போதைக்கு எந்த யோசனையும் இல்லை என்று கூறியுள்ளார் .

Categories

Tech |