உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு , டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய ஆவேஷ் கான் இடம்பெற்றுள்ளார் .
வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்களை குறித்து ,ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
அதேசமயம் இந்திய அணியில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதில் இந்த சீசனில் ஐபில் போட்டியில் ,டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான், தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதனால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் , தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. 20 வீரர்களைத் தவிர்த்து ஸ்டாண்ட் பை வீரர்களாக, 4 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . அந்த 4 வீரர்களில் ஒருவராக ஆவேஷ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.