ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள்,தாயகம் திரும்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ ஏற்படுத்தும், என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் , அடுத்த மாதம் மே 15ஆம் தேதி வரை இந்தியாவுடன் ,விமான சேவைக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின் , தனி விமானம் அமைக்கும் படி , வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புவதற்காக ,சிறப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா ,தென் ஆப்பிரிக்கா ,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாட்டை சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளன. எனவே ஐபிஎல் தொடர் முடிந்தபிறகு, வீரர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு ,அனைத்து நடவடிக்கைகளும் பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் ,என்று ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.