Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வீரர்களை மிரட்டும் கொரோனா …ஆர்சிபி அணியின் படிக்கல்-யை தொடர்ந்து … டேனியல் சாம்ஸ்-க்கு கொரோனா உறுதி …!!!

ஐபிஎல் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆர்சிபி அணியில் மற்றொரு வீரர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வருகின்ற  9ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியானது 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா  வைரஸின்  2வது அலை வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் கிரிக்கெட் நிர்வாகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  போட்டியை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள மூன்று வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ள முதல் போட்டியில், மோதிக்கொள்ளும் இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டுள்ளன. போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உள்ளனர்.

போட்டி நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது . பரிசோதனையில் ஆர்சிபி அணியின் வீரரான டேனியல் சாம்ஸ்-க்கு கொரோனா தொற்று  உறுதியானது. ஆனால் அவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான, எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இருந்தாலும் அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டார், என்று ஆர்சிபி அணி தெரிவித்தது. இதற்கு முன் ஆர்சிபி அணியை சேர்ந்த படிக்கல் தொற்றால் பாதிக்கப்பட்டார் .

Categories

Tech |