தற்போதுள்ள சூழலில் ,ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கு ,கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை ,என்று கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான ராஜீவ்சுக்லா தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வருகின்ற 9ம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் 6 நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் இதன் தாக்கம் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் வீரர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ,பின்பற்றி பாதுகாப்பாக உள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் ,ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்றுள்ள கொல்கத்தா அணியின் நிதிஷ்ராணா , டெல்லி அணியின் அக்ஷர்படேல் மற்றும் பெங்களூர் அணியின் படிக்கல் ஆகிய 3 வீரர்களுக்கு ,கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மற்ற வீரர்களும் கொரோனா தொற்றால் ,பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்று கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்தது .
இதுபற்றி கிரிக்கெட் வாரிய துணை தலைவரான ராஜீவ்சுக்லா கூறுகையில், தற்போதுள்ள சூழலில் வீரர்களை பாதுகாக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை . கொரோனா வைரஸிலிருந்து மற்ற வீரர்களை பாதுகாக்க , தடுப்பூசி செலுத்துவது தற்போது அவசியமாக உள்ளது. எனவே வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை பற்றி மத்திய சுகாதார அமைச்சகத்துடன் கலந்துரையாடி விரைவில் கிரிக்கெட் வாரியம் நல்ல முடிவை எடுக்கும் என்று ராஜீவ்சுக்லா கூறினார்.