சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20.45 கோடி ரூபாயில் ஏலம் எடுத்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் 167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 இந்திய வீரர்களை எடுத்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20.45 கோடி ரூபாயில் ஏலம் எடுத்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்.
அஜின்கியா ரகானே :
நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி முதல் வீரராக இந்திய வீரர் ரஹானேவை அடிப்படை தொகையான ரூ 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இவர் கடந்த தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ் :
பல அணிகள் போட்டி போட்ட நிலையில், இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை போட்டி போட்டு 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே.
சேக் ரஷீத், அஜய் மண்டல், பகத் வர்மா :
ஆந்திராவைச் சேர்ந்த ஷேக் ரஷீத், சத்தீஸ்கரை சேர்ந்த ஆல் ரவுண்டரான அஜல் மண்டல், ஹைதராபாத்தை சேர்ந்த பகத் வர்மா ஆகிய 3 பேரை அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
நிஷாந்த் சிந்து :
ஹரியானாவை சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இவரை ரூபாய் 60 லட்சத்திற்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
கைல் ஜேமிசன் :
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜேமிசனை அடிப்படை தொகையான 1 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. மொத்தம் 7 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சிஎஸ்கே வரலாற்றில் மிகவும் அதிக விலை கொடுத்து எடுத்த வீரர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆல்ரவுண்டர் பிராவோவின் இடத்தை நிரப்புவதற்காக சாம் கரனை குறி வைத்தது சிஎஸ்கே. ஆனால் திடீர் திருப்பமாக சாம் கரன் கிடைக்காத பட்சத்தில் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சாம்கரன் கிடைக்காத சோகம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு நட்சத்திர வீரர் எல்லோ ஆர்மியில் இணைந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
தோனி (கேட்ச்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர்,பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.
Super Stoked! 🦁#WhistlePodu #SuperAuction 🦁💛 pic.twitter.com/NIZUy4t7KY
— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2022
Signed ✍️and Stamped💮
📍Destination: 6️⃣0️⃣0️⃣0️⃣0️⃣5️⃣ 🦁#WhistlePodu #SuperAuction 🦁💛 pic.twitter.com/0jlafz9v1n— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2022