Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPLAuction : இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அதனைத்தொடர்ந்து 1.5 கோடி அடிப்படை விலையுடன் ஹாரி புரூக் ஏலத்தில் விடப்பட்டார். இவரை எடுக்க  ராஜஸ்தான் ராயல்ஸ் & ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே கடுமையான ஏலப் போர் நடைபெற்றது. மேலும் இங்கிலாந்தின் ஹாரி புரூக்கிற்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணைந்தது. ஏலம் 8 கோடியை தாண்ட, அதன்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூபாய் 42.25 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூபாய் 32.2 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூபாய் 23.35 கோடியும், மும்பை இந்தியன்ஸ் ரூ. 20.55 கோடியும், டெல்லி கேப்பிட்டல் ரூபாய் 19.45 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் ரூபாய் 19.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூபாய் 13.2 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8.75 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7.05 கோடியும் கைவசம் வைத்துள்ளது.

இந்த ஏலப் பட்டியலில் மொத்தம் 405 வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் 273 பேர் இந்தியர் மற்றும் 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 87 பேர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

Categories

Tech |