Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்போ ரிலீஸ்க்கு ஏதாவது பிளான் வச்சிருக்கியா?’… ஆர்யாவின் ‘டெடி’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் சாயிஷா ,சதீஷ் ,கருணாகரன் ,சாக்ஷி அகர்வால் ,மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் .

மேலும் இந்த படம் வருகிற மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இன்று ‘டெடி’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஒரு பொம்மை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது . இதனால் இந்த படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |