Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு ஆனந்தி சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்  கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |