Categories
மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு திருமணம்… மணப்பெண் அசத்தல்… நீங்களே படித்து பாருங்களேன்…!!

திருமண ஊர்வலத்தின் போது  மணப்பெண் பாரம்பரிய கலைகளை ஆடி அசத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேமாங்குளம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நிஷா என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் செய்ய இரு வீட்டாரின் பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், நிஷாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து திருமணான புது தம்பதிகளை ஊர்வலம் அழைத்து சென்ற போது மணப் பெண்ணான நிஷா திடீரென நம் பாரம்பரிய கலைகளான சிலம்பம் சுழற்றியும், சுருள் வாள் வீச்சு போன்றவற்றை ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதனை திருமணத்திற்கு சென்ற அனைவரும் மகிழ்ச்சியால் கைகளை தட்டி அந்த மணப்பெண்ணிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.   இவ்வாறு தனது திருமணத்தில் மணப்பெண், மண் மனம் மாறாத நம் பாரம்பரிய கலைகளை ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Categories

Tech |