Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படிக்கூட யோசிப்பாங்களா… நண்பர் என்ற பெயரில் மோசடி… மூதாட்டியின் பரபரப்பு புகார்…!!

மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி பகுதியில் 65 வயதுடைய ராமலட்சுமி என்ற மூதாட்டி  தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சென்னை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அப்பகுதியில் உள்ள ரயில்வே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர்  ராமலட்சுமி நிறுத்தி உள்ளார்.  இதனையடுத்து அந்த வாலிபர் உங்களுடைய மகன் எனக்கு  நண்பர் என்று அறிமுகமாகி உங்களது மகன் வங்கி கணக்கில் 75,000 ரூபாய் பணம்  கடன் வழங்க அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  அந்த கடன் தொகையை பெற்று உங்களிடம் வழங்க வேண்டும் என்று உங்கள் மகன் எனக்கு அறிவுறுத்தி உள்ளார் என்று அந்த வாலிபர்   மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார் . இதனை உண்மை என நம்பிய அந்த மூதாட்டி அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் சூலக்கரை பகுதிக்கு சென்றதும் அந்த மூதாட்டியை கீழே இறங்க சொல்லி வண்டியை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் ராமலட்சுமி கீழே இறங்கியதும் நீங்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு வங்கிக்கு சென்றால்  கடன் தர மாட்டார்கள் என்று கூறி உங்களுடைய தங்க நகை மற்றும் வளையல்களை கழற்றி என்னிடம் கொடுங்கள் நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்த மூதாட்டி சிறிதும் யோசிக்காமல் அந்த வாலிபரிடம் தனது நகைகளை கழற்றி கொடுத்துவிட்டார்.

அதன்பிறகு அந்த வாலிபர் ராமலட்சுமியை அங்கேயே இருக்கும்படியும்  தான் பணம் எடுத்து வருவதாகவும்  கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால்  வெகுநேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூதாட்டி  வாலிபரை சந்தித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியிடம் நகைகளை மோசடி செய்து தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |