Categories
தேசிய செய்திகள்

ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட 93 அதிகாரிகள்… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அதிகாரி பிரபுல் பட்டேல் எடுத்த முடிவுகளுக்கு எதிராக மற்றும் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட 93 அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “வளர்ச்சி என்ற பெயரில் அழகான லட்சத்தீவில் நடைபெற்று வரும் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த முடிவுகள் அனைத்தும் மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேல் அறிவித்த சர்ச்சைக்குரிய முடிவுகளை திரும்ப வாபஸ் பெற வேண்டும். முழுநேர, மக்கள் உணர்வுடன் மதிப்பு அளிக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் constitutional conduct group என்ற அமைப்பின் பெயரில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |