வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் வனச்சரகம் காவலூர் பரிவு உட்பட 3 பகுதிகளில் வசிக்கும் நபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி மற்றும் கண்ணப்பன் ஆகிய இருவரும் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்து வைத்திருந்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர்.