வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.