Categories
உலக செய்திகள்

ஒழுங்கா இருங்க….. இந்து தீவிரவாதிகள் ….. இந்தியாவை சீண்டும் ஈரான் …!!

இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக இந்தியாவை ஈரான் சீண்டியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதற்காக கொண்டுவந்தது என்று தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றது.வடக்கு டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் ஒரு தராப்பினர் ஆதரவாக போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் மோதல் வெடித்து , வன்முறையாக மாறியது.

இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லப்பட்ட நிலையில்,  கலவரத்தால் அதிகம் பாதிக்கப் பட்டவர்களும் இஸ்லாமியர்கள் என்று பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளது. இந்தியா ஈரான் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு, வார்த்தை போல் நீண்டது. குறிப்பாக ஈரான் அரசு இந்தியாவை கடுமையாக விமர்சித்தது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் கூறுகையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறையை ஈரான் கண்டிக்கிறது. பல நூறு ஆண்டுகளாக இந்தியா – ஈரான் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இது நீடிக்க வேண்டும். இந்திய அரசு முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளரவிடக்கூடாது என்று கடுமையாக சாடி எச்சரித்தார். இதற்க்கு இந்திய அரசு சார்பில் ஈரான் தூதரகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயோத்துல்லா காமேனாய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவது உலகம் முழுக்கும் இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் இந்து தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும். அவர்களின் கட்சியை தடை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா உலக நாடுகளிடம் இருந்தும் ,  இஸ்லாமியர்களிடம் இருந்து தனித்து விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |