Categories
உலக செய்திகள்

BREAKING : அமெரிக்கா தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உயிரிழப்பு ….!!

ஈராக் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்.

ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின்  துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார்.

ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரிலே தாக்குதல் ஈராக்கில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது  என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |