Categories
உலக செய்திகள்

அதிபரின் உத்தரவால் நடத்தப்பட்ட தாக்குதல்… பதிலடி கொடுத்த பயங்கரவாத அமைப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்க படைகள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு, ஈராக் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் பதுங்கி செயல்பட்டு வரும் ஈராக் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது அமெரிக்க படையினர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் படைத்தளங்களை அமைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதலை அமெரிக்க படை ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அந்த வான்வழி தாக்குதலில் 4 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈராக், சிரியா எல்லையில் ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அமெரிக்க படை தளம் மீது இன்று பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அல்-ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க படைத்தளம் மீது இன்று எட்டு ராக்கெட் தாக்குதல் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது. அந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |