Categories
உலக செய்திகள் சற்றுமுன்

JUST NOW : ஈரானில் கொரோனா உயிரிழப்பு 194ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1,00,000 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதேபோல கொரோனா வைரஸ் தொற்றால், சீனாவில் மட்டும் குறைந்தது 3,015 உயிரிழப்புகளும், உலகின் பிற பகுதிகளில் 267 உயிரிழப்புகளும் பதிவாகியாகியுள்ளன.

இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 145 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பழி எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Categories

Tech |