Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. இன்று ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் சரியாக கடைபிடிக்கப்படுவதையும், பொது இடத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டிருந்த அறநெறி காவல்துறை பிரிவு அரசாங்கத்தால் கலைக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்த இரண்டு மாத கால போராட்டத்தில் பாதுகாப்பு படையினரின் கொடூர தாக்குதலில் தற்போது வரை 400க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், மொஷென் ஷெகாரி என்ற நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாம் நபருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆர்ப்பாட்டம் நடந்த போது பாதுகாப்பு படை வீரர்கள் இருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மஜித்ரிசா ரஹ்நவர்டு என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Categories

Tech |