Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு… 50 லாரிகளில் காய்கறி அனுப்பிய ஈரான், ஆப்கான் நாடுகள்…!!!

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது.

மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து வெங்காயம் மற்றும் தக்காளி ட்ரக்குகளில் அனுப்பப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அரசாங்கம் அந்த லாரிகளில் இருக்கும் காய்கறிகளை விரைவாக தங்கள் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |