ஈரானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டு அரசு வெளியிட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 20ஆம் தேதி ஈரானில் 14,405 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 42,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,78,827 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்திருந்து.
ஆனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 4,51,024 என தெரியவந்துள்ளது. சில வாரங்களாக தொற்று இரண்டாம் கட்டமாக பரவிவரும் நிலையில், அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகவே ஈரான் இருந்து வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட முதல் மரணம் பிப்ரவரி மாதம் இறுதியில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் மரணம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஈரானில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சந்தேகம் எழுந்து இருந்த நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.