நாங்கள் அமெரிக்காவின் செயல்பாடுகளை நெருக்கமாக கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதன்காரணமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இடையூறாக இருந்து வருகிறது என ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச விதிகளை மீறி செயல்படும் ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை அளிக்குமாறு டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது உள்ள சூழல் குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி, கத்தார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் “அமெரிக்காவின் செயல்பாடுகளை நெருக்கமாக ஈரான் கண்காணித்து வருகின்றது. எனினும் நாங்கள் பிராந்தியத்தில் மோதலை தொடங்க மாட்டோம்” என்று தொலைபேசியில் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.