சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது.
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக நாடுகளை திசை திருப்ப, இராச்சியம் மற்றும் ஈராக்கில் இருக்கும் எர்பில் போன்ற இலக்குகளை நோக்கி உடனடியாக தாக்குதல் மேற்கொள்ள திட்டம் மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, மத்திய கிழக்கில் இருக்கும் மற்ற நாடுகளின் ராணுவம் எச்சரிக்கை நிலைகளை அதிகப்படுத்தியிருக்கிறது.