ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான மஹமூத் அஹமதி நிஜாத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மஹமூத் அஹமதி நிஜாத் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, தன் ஆதரவாளர்களோடு உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் பதிவு மையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம், “ஈரான் நாட்டின் நிலையை கவனத்தில் கொண்டும், நாட்டினுடைய மேலாண்மையில் புரட்சியை உருவாக்குவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாக” கூறியிருக்கிறார்.
மேலும் இவர் கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2013ஆம் வருடம் வரை அதிபர் பதவியில் இருந்துள்ளார். சுமார் 4 வருடங்களுக்கு பின் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஈரான் சட்டம் அனுமதித்திருக்கிறது. கடந்த 2009 ஆம் வருடத்தில் மஹமூத் இரண்டாம் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது.
ஆனாலும் உள்நாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் அணு ஆயுத தயாரிப்பு போன்றவற்றில் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.