ஈரான் நாட்டிற்கு ஊருவிளைவித்தால் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவ்வாறு ஏதேனும் நடந்தால் வளைகுடா பகுதியில் அமெரிக்க கப்பல்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் சலமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு ஊருவிளைவித்தால் மிகவும் கடுமையான பலனை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு எங்களது வலிமை பற்றி தெரியும். முன்னர் நாங்கள் கொடுத்த பதிலடிகளிலிருந்து அதிகம் பாடம் கற்று இருப்பார்கள் என்றே கருதுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் போர் சூழல் உருவாகி வந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரானின் போர் தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கிவந்த அமெரிக்காவின் ராணுவ தளத்தில் தாக்குதலை நடத்தி அமெரிக்க வீரர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த 78 ஆண்டுகளில் ஈரான் அமெரிக்கா மீது நேரடியாக நடத்திய தாக்குதல் இதுவே. உலக நாடுகள் முழுவதும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த இரண்டு நாடுகளும் போர் உருவாக்கும் சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ஆபத்தான போக்காகவே பார்க்கப்படுகிறது.