சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் ஈரான் கப்பலை சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய ஈரான் , இங்கிலாந்து சிறைபிடித்துள்ள எண்ணெய் கப்பலை உடனே விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் இங்கிலாந்துக்கு சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என்று ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் .