Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூடுதாழை கடற்கரையில்…. கரை ஒதுங்கியது என்ன….? வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்….!!

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் புதைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதிக்கு அருகே கூடுதாழை கடற்கரையில் மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த உவரி கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் சுகுமாரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

அதன் பிறகு அவர் மாவட்ட வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி கடற்கரைக்கு விரைந்து சென்ற மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதம் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை பார்வையிட்டார். இதனையடுத்து வனத்துறை அலுவலர் டால்பினை மீட்டு பரிசோதனை செய்த பிறகு அதனை கடற்கரையில் புதைத்துள்ளார்.

Categories

Tech |