Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!

இறந்த நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடற்பசு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையில் அதிகமாக கடல் பசுக்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  கிராமமக்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கரை ஒதுங்கிய கடல் பசுவை மேற்பார்வையிட்டனர். அதன்பின்னர் அவர்கள் நெல்லை கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த நிலையில் கிடந்த கடல் பசுவை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து தகனம் செய்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளனர்.

Categories

Tech |