புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வகுப்பு மாணவர்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகிறது.
பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க்கிறது இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பிளஸ்-1 பயின்றுவரும் மாணவிக்கு அந்த வகுப்பாசிரியர் சண்முகநாதன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பற்றி மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர் .
இதனைஅடுத்து ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். அதன் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனைப் பற்றி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியது பிளஸ்- 1 படிக்கும் மாணவியிடம் ஆன்லைனில் வாட்ஸ்அப் மூலமாக பாடம் நடத்தும் பொழுது கைப்பேசியில் இரண்டு அர்த்தத்தில் ஆசிரியர் பேசியுள்ளார்.
ஆசிரியர் பணியில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகிறது. இந்த புகாரின் பேரில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளி தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சண்முகநாதனிடம் விசாரணை நடந்து வருகிறது.