ஈரானில் மிகக்குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக்கின் தெற்கு மாகாணங்களில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் வயதினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓராண்டுக்கு பின்னர் நடக்கவேண்டிய தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்பொழுது நடத்த அனுமதி அளித்துள்ளது. இதன் படி தேர்தலானது நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 41 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறிப்பாக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள் ஒடுக்குமுறைகளை கையாண்டதால் இளைஞர்கள் தேர்தலை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. அதிலும் ஈரானின் முன்னாள் அதிபரான சதாம் ஹுசைன் பதவி நீக்கம் செய்யப்பட்ட 2003 ஆம் ஆண்டிலிருந்து நடந்த தேர்தல்களில் இது தான் மிகவும் குறைந்த வாக்கு பதிவு சதவீதமாகும். மேலும் வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.