Categories
உலக செய்திகள்

BREAKING : உச்ச கட்ட பதற்றம்… 80 ராணுவ வீரர்கள் பலி… ஈரானின் அதிகாலை அதிரடி!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள அன் அல்- அசாத் ஆகிய இரண்டு அமெரிக்க விமான தளம் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதில் எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர், எவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்பன குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரையில் எல்லாம் நலமாகவே உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை என்று ட்விட் செய்திருந்தார்.

Categories

Tech |