Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபரை சந்திக்க மாட்டேன்!”.. ஈரானின் புதிய அதிபர் உறுதி..!!

ஈரானின் புதிய அதிபரான இப்ராஹிம் ரய்சி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சந்திக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று புதிய அதிபராக இப்ராஹிம் ரய்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் டெஹ்ரானில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த இப்ராஹிம் மாட்டேன் என்று கூறினார். மேலும் அமெரிக்கா, ஈரான் மீதான வன்முறைகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்ராஹிமிற்கு எதிராக தேர்தலில் களமிறங்கிய அப்துல்நாசா் ஹெம்மாட்டி பிரச்சாரத்தில் அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Categories

Tech |