உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் தவறுதலாக உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மன்னிக்க முடியாத தவறு நடந்து விட்டதாக தெரிவித்த அவர், சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். ராணுவம் நடத்திய விசாரணையில் ஈரான் ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.