அமெரிக்காவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள் பெரும் சர்ச்சையையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தலைநகர் கோம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லறையில் மார்ச் 1-ம் தேதி 2 புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து ஏராளமான கல்லறைகளை தோண்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதனால் அந்நாட்டு உயிரிழப்புகளை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஈரானில் இதுவரை 12729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 608 என பதிவாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்ககூடும் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.