Categories
உலக செய்திகள்

“மாரடைப்பால் உயிரிழந்த பெண்”… சடலத்திற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டணை… ஈரானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது .

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட மிக கடுமையான தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போது ஈரானும் அந்த பட்டியலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இருப்பினும்,  அவரை அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். இதுகுறித்து ஈரானில் இருக்கும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில்,  சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும் தனது மகளையும்  உடல்ரீதியாக துன்புறுத்திய தனது கணவரை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சாராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சாரா தூக்கிலடப்பட்ட சம்பவம் குறித்து அவரது வழக்கறிஞர் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது என்னவென்றால், சாரா தூக்கில் போடுவதற்கு முன்பு வரிசையில்  நிற்க வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக 15 நபர்கள் தூக்கில் போடுவதற்காக வரிசையில் நின்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டு உயிரிழப்பதை  சாரா பார்க்கவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். அதனை பார்த்த உடனேயே சாரா மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவர் இறந்ததை பொருட்படுத்தவில்லை, தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று எண்ணி அவரது  கழுத்தில் தூக்குக் கயிற்றை கட்டிவிட்டு நாற்காலியில் நிற்க வைத்துள்ளனர். பின்னர் நாற்காலியை சாராவின் மாமியார் காலால் எட்டி உதைத்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |