Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

நாம் இறந்த பின் எங்கு செல்வோம்..? நம் ஆன்மாவிற்கு உயிர் இருக்கிறது..!!

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களுக்கு,  நாம் ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பதுதான். அதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும், தூரத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும், அல்லது தன்னை பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும்.

ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று, சொல்லும் மனிதனுக்கு அவன் இறந்த பின்பும் அவனுடைய ஆன்மா எப்படி இருக்கும் என்று, எங்கெல்லாம் பயணம் செய்ய முடியும் என்று, கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அதைப்பற்றி உண்மைதான் என்ன “சனாதன தர்ம சாஸ்திரம்”கூறுகிறது. இதில் யார், யார் எந்த, எந்த நிலையில் அடைக்கப்படுகிறார்கள். யார், யாருடைய ஆன்மா எங்கே செல்லும், யாரு மேலே யாரு கீழே போன்ற மத நம்பிக்கை பற்றி பேசக் கூடியது,

அந்த தர்ம சாஸ்திரத்தில் மனிதன் இறந்த பின்பும் அவர்களுடைய ஆன்மாக்கள் எங்கே பயணிக்கிறது என்பதை பற்றியும் குறிப்பிடுகிறது.  மனிதர்கள் உயிர் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் இறந்த பின்பும் கூட, மனித உடல்கள் தான் இறக்கின்றன. ஒழிய ஆன்மாக்கள் அழிவதில்லை.

ஆன்மாக்களுக்கு உயிர் உண்டு என்றுதான் சொல்லப்படுகிறது. அப்படி உயிரோடு இருக்கும் ஆத்மா உடல் இறந்தபின் என்னதான் செய்கிறது. ஒரு மனிதன் இறந்த பின் முதல் ஒன்பது நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் உலாவும்.

குறிப்பாக முதல் மூன்று நாட்கள் நீரிலும் , நான்காவது நாட்கள் முதல் ஆறாவது நாள் வரை நெருப்பிலும், ஏழாவது நாள் முதல் ஒன்பதாம் நாட்கள் வரை ஆகாயத்திலும் ஆன்மாக்கள் வசிக்கும்.

இந்த ஒன்பது நாட்களும் ஆன்மாக்கள் வெறுமனே உலாவுவதில்லை. தான் இறந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய வீட்டுக்கு யாரெல்லாம் துக்கம் கேட்க வருகிறார்கள் என்றும், பார்த்துக் கொண்டே இருக்கும்.

அப்படி 9 நாட்கள் நோட்டமிட்டு பத்தாவது நாளில் அந்த ஆன்மாவின் ஜீவன் தன்னுடைய வீட்டிற்கு வருகிறது. அதனால் தான் பத்தாவது நாள் செய்யப்படும் காரியம் மிக முக்கியமானது என்று இந்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

நான் வாழ்ந்த வீட்டுக்குள் பத்தாவது நாள் அடி எடுத்து வைக்க ,ஆன்மாவின் பதினோராவது நாள் மற்றும் பன்னிரண்டாம் நாட்களில் நாம் வைக்கின்ற எள் கலந்த பண்டங்களை ஏற்றுக்கொண்டு உண்டு ஆரம்பிக்கிறது.

பன்னிரண்டாம் நாள் என்பதை ஏற்றுக்கொண்டு பின்னர், பதின்மூன்றாம் நாள் தான் எமனின் காவலர்களான சிங்களர்கள் என்றழைக்கப்படுபவர், கயிற்றினால் இந்த ஆன்மாவை கட்டி இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது ஆன்மா தான் வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழும்.

வீட்டை விட்டு செல்லும் ஆன்மா ஒரு நாளைக்கு இரவு பகல் சேர்த்து 247 காத தூரம் அளவுக்கு பயணிக்கும் இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆன்மாக்களுக்கு பசிக்கும் என்பதால் மாதத்தில் ஒருநாள் எந்தத் திதியில் அந்த ஜீவன் இறந்ததோ, அந்த திதியன்று  மட்டும் ஓய்வு கொடுக்கப்படும் .

அப்படி பசி எடுக்கும் போது யார் மறைத்து பசியை தாகம் தீர்க்கிறார்களோ  அவர்களை ஆன்மா வாழ்த்தும், அதனால்தான் வீட்டில் பெரியவர்கள் இறந்த திதி அன்று  படையல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதேபோல் இறந்த முதல் 12 மாதங்களும் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் அவர்கள் இறந்த திதி அன்று மகா பிண்டம் வைத்து வழிபடவேண்டும். 12 மாதங்கள் வரை ஆன்மாக்களின் பயணம் தொடரும். அதன் பின் ஆன்மா யம லோகத்தை அடையும்.

இறந்த ஆன்மா ஒரு வருடம் பயணம் செய்யும், அதனால்தான் பொதுவாக இறப்பு நடந்த வீட்டில் ஒரு ஆண்டு வரை எந்த வித கொண்டாட்டங்களும், சுபகாரியங்களும் செய்வதில்லை. இப்படி பயணம் மேற்கொண்டு  யம லோகத்தை அடைந்த பின்புதான் அந்த ஆன்மா சொர்க்கத்திற்குப் போகுமா, இல்லை நரகத்திற்கு போகுமா,என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அது அவரவர் மனதைப் பொறுத்தது பாவம் செய்த ஆத்மாவாக இருந்தால் பொறுத்திருக்கும் அதுவே புண்ணியம் நிறைவு செய்த ஆத்மாவாக இருந்தால், அது எமலோகத்திற்கு செல்லும் இதுதான் நாம் இறந்தபின் நடக்கும் காரியங்கள்.

Categories

Tech |